தோட்டத் தொழிலாளர்களைப் புரிந்துகொள்ளல்
நாம் 800,000 க்கும் மேற்பட்ட ஒரு தோட்டச் சமூகத்தைக் கொண்டிருக்கின்றோம். இலங்கை, அதன் தேயிலைமூலம் உலகம் முழுவதிலும் அறியப்படுகிறது. துரதிஷ்டவசமாக, பெருந்தோட்டங்கள் தனது தொழிலாளர்கள் எண்ணிக்கையை தக்கவைத்துக் கொள்வதில் பாரிய பிரச்சினைகளை எதிர்கொண்டுள்ளன. இளைய தலைமுறையினர் தொடர்ந்தும் தோட்டங்களில் இருந்து விலகி, நகரங்களுக்குச் சென்று விடுகின்றனர். தோட்டத் தொழிலாளர்களுக்கு ஒரு இலாபகரமான வாழ்க்கைப் பாதையை ஏற்படுத்தாததும், அவர்கள் வாழும் மிகவும் சோகமான நிலைமைகளும் இதற்கு நேரடியான காரணங்களாகவுள்ளன.
இந்த நெருக்கடியை புறநிலையாக, மனிதாபிமானமாகப் பார்த்தால், ஒரு தீர்வைக் காண முடியும்.
லசந்த ஒரு தேயிலைத் தோட்டத்தில் வளர்ந்தவர். அதனால் இந்த சமூகத்தை அறிந்துகொண்டும், உணர்வுபூர்வமாக புரிந்து கொண்டுமுள்ளார்.
தோட்ட தொழிலாளியும் அவர்கள் மற்றும் குடும்பங்களும் தாங்களும் சமூகத்தின் ஓரங்கம் என்ற உணர்வு பெற்றால், அதிசயங்கள் பல நிகழும்.
தேயிலைத் தோட்டங்களில் வளர்ந்த, லசந்த இந்தச் சமூகத்தை அறிந்துகொண்டும், உணர்வுபூர்வமாக புரிந்து கொண்டுமுள்ளார்
தோட்ட தொழிலாளர்களும், குடும்பத்தினரும் தோட்ட கம்பனிக்குச் சொந்தமான ஒரு உணர்வை கொண்டிருக்க வேண்டும் என அவர் நம்புகிறார். இந்தத் தொழிலாளர்களின் உளவியலே அற்புதங்களை நிகழ்த்தும்.
செயற் திட்ட்ங்கள்
சரியான திசையில் செல்லும்பொருட்டு, அனைத்து பக்கங்களிலிருந்தும் ஏற்படும் சவால்களையும் வரையறைகளையும் புரிந்துகொண்டு, ஒரு நிரந்தரமானதும், நீடித்தததுமான தீர்வைக் காணும் நோக்குடன், நாம் பெருந்தோட்ட தொழிற்சங்கங்கள், பெருந்தோட்ட மனித அபிவிருத்தி நம்பிக்கைநிதியம் மற்றும் பெருந்தோட்ட கம்பனிகளுடன் ஒரு உரையாடலைத் தொடங்குகின்றோம்.