எமது குறிக்கோள்
நேர்மை, பொறுப்புக்கூறல், சமத்துவம், சேர்த்துக்கொள்ளல், வன்முறையின்மை ஆகியவற்றை நிலைநாட்டுவதற்கு அர்ப்பணிக்க்க்கூடிய மக்கள் சிந்தனை கொண்ட குடிசார், சமூக குழுக்களை ஒன்றுதிரட்டல்,.
உண்மையான சமாதானத்தை நேர்மையான சமரசம் மூலம் அடைவதற்குப் பணிபுரிதல்.
உண்மையான ஜனநாயகத்தை நிலைநாட்டுவதன் மூலமாகவும், சட்டத்தின் ஆட்சி முறையை ஏற்படுத்துவதன் மூலமாகவும் நல்லாட்சி அமைத்தல்.
அதிகரித்த அன்னிய முதலீடு, அதிகளவான தொழிற்சாலைகள், அதிகூடிய வேலைவாய்ப்புகள் மூலம் நாட்டின் நிலைநீடித்த வளர்ச்சியை உறுதிப்படுத்தி, வெறும் வார்த்தைகளாலன்றி உண்மையாக இலங்கையை ஆசியாவின் அற்புதமாக மாற்றமடையச்செய்தல்.
இந்த அழைப்பு
இலங்கையில் உள்ள இலங்கையர்கள் (மற்றும் தற்போது வெளிநாட்டில் இருப்பவர்கள்), இலங்கையின் மேம்பாட்டுக்கு ஒரு மாற்றத்தை ஏற்படுத்த ஒரு உடன்பாட்டுடன் செயற்படவேண்டும் என நம்பிக்கை கொண்டுள்ள சகல குடிசார் சிந்தனைகொண்ட மக்களுக்கும் அழைப்பு விடுக்கப்படுகிறது. அனைத்து முயற்சிகளின் அடிக்கல்லாக உண்மைத்தன்மையை நிலைநிறுத்த வேண்டும். இந்த வழியில் நாம் ஒருபோதும் தவறாக போக முடியாது!
குடிசார் சமூகத்தைப் பற்றி எண்ணும்போது, பெரும்பாலும், அதிக எண்ணிக்கையிலான சமூகத்தின் அடிமட்டத்திலுள்ள மக்களையே நாம் கருதுகிறோம். குறைந்த வசதி படைத்த மக்கள் ஊழல் அரசியல்வாதிகளால் இலகுவாக ஏமாற்றப்பட்டு, அவர்களுடைய வாக்குகள் பொய்யான வாக்குறுதிகளால் பெற்ப்படுவதை நாம் பார்க்கின்றோம். ஆனால் இவர்கள்தான், நம் நாட்டில் "குரல் பலம்" கொண்ட ஒரே பிரிவு என்று பொருள் இல்லை
நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்திக்குப் பங்களிக்கும் முதலாளிகளாகவோ அல்லது ஊழியராகவோ இருக்கும் எனது நண்பர்களே, எங்களது கருத்துபற்றி குரல் கொடுக்க எமக்கு சட்டபூர்வமான உரிமையுண்டு.
தனியார் துறை தனது "குரல் பலத்தைக்’ காட்டுவதில்லை. எவர் ஒத்துக்கொள்கிறாகளோ இல்லையோ, தனியார்துறைதான், 'நாட்டின் வளர்ச்சிக்கான உந்துவிசை'; தனியார்துறை தனது சரியான இடத்தை பிடித்துக் கொள்வதற்கு இதுவே சரியான தருணம்.
மறுபுறம் பொதுத்துறையைப் பார்த்தால், பொதுத்துறை அதிகாரிகள்தான் - இவர்களில் பெரும்பாலானவர்கள் இலங்கை நிர்வாக சேவையில் இருந்து வந்தவர்கள் - கொள்கை அளவில் அரசு எந்திரத்தை இயக்குவதற்கான பொறுப்புக் கொண்டவர்கள். ஆனாலும், நடைமுறையில், பொதுத்துறை அதிகாரிகள், அரசியல்வாதிகளின் "கூட்டாளிகளின்" நிலைக்கு குறைந்துள்ளனர். இதில் மாற்றம் தேவை
ஆட்சியில் உள்ள அரசாங்கத்தின் அல்லது எதிர்க்கட்சியின் கைக்கூலிகள் அல்ல, நாங்கள்..
எல்லா விஷயங்களையும் வெறுமனே விமர்சித்து ஒரு பக்கத்தில் காத்திருக்க நாம் விரும்பவில்லை. பிரச்சனைகளுக்கு முனைப்பான தீர்வாக இருக்க நாம் விரும்புகிறோம்.
மகாத்மா காந்தி சொன்னது போல, "சமாதானத்திற்கான பாதை அல்ல, சமாதானமேதான் பாதை " என்று நாம் நம்புகிறோம்.
நாம், இன மோதல்களுக்கு தொடர்புடைய அடிப்படைக் காரணங்களை குறைகளை கண்டறிந்து நிவர்த்தி செய்ய முயல்வோம், நாம் அனைவரும் ஏற்றுக் கொள்ளக்கூடிய தீர்வுகளைப் பரிந்துரைப்போம். எமது இறுதி இலக்கு, எமது தாய்நாடான இலங்கை, அனத்துக் குழந்தைகளுக்கும், இனம், மொழி, மதம் அல்லது சாதி தொடர்பான பாகுபாடுகள் இன்றி சமமான கௌரவத்துடன் வாழ்வதற்கான சொர்க்கபுரியாதல் வேண்டும்.
இன முரண்பாடு தீர்க்கப்படவில்லை என்றால் நாம் ஒரு நாடு என்ற வகையில் முன்னோக்கிச் செல்ல முடியாது. 2009ல் போர் முடிவுக்கு வந்தது; ஆயினும்கூட அழுத்தங்கள் இன்னும் உள்ளன. என்ன முன்னேற்றம் கண்டோம்; இதன்மேலும் சொல்ல என்ன இருக்கிறது.?
சமத்துவம், வெளிப்படைத் தன்மை, நல்லாட்சி, அநீதி, ஊழல் குற்றம் ஆதியவற்றிக்கு எதிரான ஒரு நிலைப்பாட்டை எடுத்து, காரியங்களை சரியாக செய்யப் பாடுபடும் கல்வி கற்ற இலங்கைக் குடிசார் சமூகத்தின் கடப்பாட்டினை பார்க்கும்போது, இலங்கையர்கள் அனைவரும், எந்தவொரு மறைமுக நிகழ்ச்சி நிரலின்றி, அனைத்து இலங்கையர்களின் உரிமைகளைப் பாதுகாப்பதற்காக நிலைமையைக் கையில் எடுத்துக் கொண்டுள்ளனர் என்ற முடிவுக்கு, இலங்கை அரசாங்கத்தை விமர்சிக்கும் பல்வேறு அரசாங்க எதிர்ப்பு புலம்பெயர் அமைப்புக்கள் மற்றும் சர்வதேச சமூகத்தின் பகுதிகள், வருவார்கள். தற்போது அச்சுறுத்தலுக்கு உட்பட்ட நிலையிலுள்ள நாடு, அதன் தோற்றம் என்பனவற்றைக் காப்பாற்றும் ஒரே நோக்கத்திற்காக நாம் பாடுபடுகின்றோம் என்பதை அவர்கள் கண்கூடாகக் காண்பார்கள்
வடபகுதி தமிழ் சகோதரர்களுக்கேயான தனி உரித்தில்லை என்பதனையும், அதே சமயத்தில், இலங்கை அதன் முழுமையையும் சிங்களவர்களுக்கென்றே பிரத்தியேகமாக உரித்துடையதல்ல என்பதனையும் நாம் நினைவுபடுத்திக் கொள்ள வேண்டும். இலங்கையின் முழுமையும் அன்னை இலங்கையின் பிள்ளைகள் அனைவரினதும் தாய்நாடு எனலாம். இது மறுக்கப்படமுடியாத ஒரு உண்மை.
எமது பெற்றோர்கள் எமக்கு வழங்கிய யுத்தத்தால் சின்னாபின்னப்பட்ட நாட்டின் மரபுரிமையை மாற்றி எமது பிள்ளைகளுக்கு சமாதானத்தின் மரபுரிமை தருவது மிக முக்கியமான வெகுமதி ஆகும்.