• முப்பதாண்டுகளுக்கும் மேலாக முன்னெடுக்கபட்டதும்  ஆயிரக்கணக்கான இளம் இலங்கையர்கள் வாழ்க்கையைக் காவுகொண்டதுமான இரத்தக்களரி கண்ட போருக்கான அடிப்படைக் காரணங்கள், கண்டறியப்பட்டு தீர்த்து வைக்கப்பட்டனவா?

  • இன முரண்பாட்டுக்கான அடிப்படைக் காரணங்களும், குறைகளும், கண்டறியப்பட்டுத் தீர்த்து வைக்கப்படாது மூடிமறைக்கப்பட்டால், மற்றொரு எழுச்சி ஏற்பட வாய்ப்புள்ளது. அதன் வடிவம் எப்ப்டியிருக்குமென்பது கடவுளுக்குத்தான் வெளிச்சம்.

  • காணாமற்போனோர், உயர்பாதுகாப்பு வலயங்கள், தொல்பொருளியல் இடங்கள் என்ற பெயரில் காணி அபகரிப்பு, கைது செய்யப்பட்டு, அதி நீண்ட காலமாக நீடிக்கப்பட்ட சிறை வைக்கப்பட்டுள்ள கைதிகள்,  வடக்கின் ஏனைய முக்கிய விடயங்களாகும்.

  • வட மாகாணத்தில் 60,000க்கும் அதிகமான மகளிர் தலைமைக் குடும்பங்கள் உள்ளன. தெற்கில் உள்ள மக்கள் அவற்றைப் பற்றி அக்கறை கொண்டுள்ளனர் என்பதை அவர்கள் அறிந்திருக்க வேண்டும். துரதிருஷ்டவசமாக, தெற்கத்திய அரசியல்வாதிகள் சிலர்,  வடக்கில் உள்ள மக்கள் மற்றும் அவர்களின் சவால்கள் பற்றித் தேர்தல் பேச்சுக்களில் பேசுகின்றனர், அவை தேர்தலுக்குப் பின்னர் மறக்கப்பட்டுவிடுகின்றன.

வடக்கில் இருப்பவர்களின் உரிமைகள், சிறப்புரிமைகளுக்காக தெற்கில் உள்ள மக்கள் போராடும்வரை, தசாப்த காலங்களாக எமது நாட்டை நாசமாக்கியுள்ள இன மோதல்களுக்கு ஒரு போதும் தீர்வு காணமுடியாது.

செயற் திட்ட்ங்கள்

  • இது தொடர்பில் தெற்கில் உள்ள மக்களின் ஆதரவுடன் யாழ் கிராமங்களின் வாழ்வை உயர்த்துவோம் என்ற நம்பிக்கையுடனும், ஏனையவர்களை அதேபோல் செயற்பட ஒரு மாதிரியை உருவாக்கவேண்டுமென்பதற்காகவும்,, எமது குழுவான  'யாழுடன் காதல்’', யாழ்ப்பாணம் வட்டுகோட்டை தெற்கில்  உள்ள வறிய கிராமமொன்றைத் தத்தெடுத்திருக்கின்றது.

  • கொழும்பில் உள்ள கூட்டுத்தாபனங்களும் பெருநிறுவனங்களும் வடக்கில் ஆலைகளை திறந்து பெரும் வேலைவாய்ப்புக்களை வழங்கக்கூடிய நிலையையடைவதற்கான, அனைத்து முயற்சியுக்களையும் இந்தக் குழு மேற்கொள்ளும்.

  • எங்களைப் போன்ற உணர்வு கொண்ட மக்கள் எங்களோடு சேர்ந்துகொள்ள வேண்டும் என்று நாங்கள் எதிர்பார்க்கின்றோம்.

    ‘யாழுடன் காதல்’ புகைப்படத்தொகுப்புக்கு வருகைதாருங்கள். மேலும் முகநூலில் ‘யாழுடன் காதல்’(Love Jaffna)  பக்கத்தையும் விரும்புங்கள்.